கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் மீண்டும் நாளை முதல் ஆரம்பமாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி பொலன்னறுவை மாவட்டத்தில் நாளை தேர்தல் பிரசாரக் கூட்டத்தை பொதுஜன முன்னணி நடத்தவுள்ளதாகவும் கூறப்படுகின்றது .
இந்த கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச கலந்துகொள்கின்றார்.
அத்துடன் மகிந்தவுடன் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் மேடையேறுகின்றார் என்றும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.



















