யாழ் குருநகர் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை குருநகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய இரு இளைஞர்களை பொலீசார் சோதனையிட்ட போது அவர்களிடம் இருந்து 100 மில்லிகிராம் ஹெரோயின் பக்கெட்டுக்கள் மீட்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட நபர்கள் அனலைதீவு மற்றும் கல்வியங்காடு பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் கைதான சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்



















