முன்னாள் ராஜாங்க அமைச்சர் ஹரீஸுடன் தான் நட்பாக பழகுவதாக முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார்.
உண்மையில் எனக்கும் அவருக்கும் எந்தவித விரோதமும் இல்லை. நாடாளுமன்றத்தில் நாங்கள் இருவரும் இருக்கின்ற போது நகைச்சுவையாக பேசுவோம்.
அவரும் ஒரு சிறந்த விவசாய குடும்பத்திலே பிறந்தவர். நானும் ஒரு விவசாய குடும்பத்திலிருந்து வந்தவன் என்ற அடிப்படையில் எங்கள் இருவருக்கும் நிறைய உறவுகள் இருக்கிறது
இதை பூதாகரமாக்குவதற்கு சிலர் முற்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
என்ற போதும் வெளிப்படையாக மக்கள் முன்னால் மக்களுடனான சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போது ஒருவரையொருவர் தாக்கும் வகையிலான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
எனவே இவர்கள் வெளிப்படையாக தங்களை கருத்துக்களால் தாக்கிக் கொண்டு அம்பாறை மக்களை முட்டாளாக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனரா என்ற கேள்வி எழுவதாக சமூக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.



















