கிளிநொச்சியில் நேற்று காட்டு யானை தாக்கியதில் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர் யாழ். போதனா வைத்தியசாலையில் மூளைச்சாவடைந்த நிலையில் சிகிச்சைபெற்று வருவதாக யாழ். போதனா வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிளிநொச்சி வளாக தொழில்நுட்ப பிரிவில் சேவையாற்றும் கொழும்பு களனி பகுதியை சேர்ந்த காயத்திரி டில்ருக்சி என்ற 32 வயதுடைய ஒருவரே சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளார்.
அவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், விரிவுரையாளர் தீவிர கண்காணிப்பு பிரிவில் மூளைச்சாவடைந்த நிலையில், சிகிச்சை பெற்றுவருவதாக யாழ். போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விரிவுரையாளர் விடுதியில் தங்கியிருந்த குறித்த விரிவுரையாளரும் மற்றுமொருவரும் வணக்க ஸ்தலத்திற்கு சென்று திரும்புகையிலேயே, யானை குறித்த இருவரையும் துரத்தியதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
யானைத் தாக்குதலுக்குள்ளான விரிவுரையாளர் இறந்துவிட்டதாக நேற்றையதினம் செய்திகள் வெளியாகி இருந்தது.
இந்நிலையில், தற்போது அவர் மூளைச்சாவடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலை சிகிச்சைபெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.