ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஐக்கிதேசிய கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்க தயாராகவுள்ளேன் என நவீன் திசநாயக்க மீண்டும் தெரிவித்துள்ளார்.
இன்று நுவரேலியாவில் தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சி நாட்டுக்கு பாரிய சேவையாற்றியுள்ளது என குறிப்பிட்டுள்ள அவர், முன்னாள் பிரதமரின் பாதைச்சுவடுகளை பின்பற்றி இலங்கை முழுவதுக்கும் சேவையாற்றுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் அனைத்து பிரிவுகளும் ஒன்றிணையவேண்டும் என தெரிவித்துள்ள நவீன் திசநாயக்க கட்சிக்குள்ளும் நாட்டிலும் ஏற்படும் பிளவுகள் மக்களை பாதிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.



















