இலங்கையிலிருந்து பாதாள உலக நடவடிக்கைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தலை ஒழிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பாதாள உலக நடவடிக்கைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள அனைத்து வலைப்பின்னல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்நிலையில், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை கைது செய்வதற்கான முறையான திட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து ஜனாதிபதி தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,
“போதைப்பொருள் கடத்தல் வலைப்பின்னல்கள் சம்பந்தப்பட்ட அனைத்து வகையான கதாபாத்திரங்கள் தொடர்பான தகவல்களை சட்ட அமுலாக்க முகவர் பெற்றுள்ளது.
இந்த வலைப்பின்னல்களின் கடைசி உறுப்பினர் கைது செய்யப்படும் வரை நடவடிக்கைகள் தொடரும்.
அனைத்து பாதாள உலக நடவடிக்கைகளையும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களையும் ஒழிக்க சிறப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார்.



















