ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் முன்னாள் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரனின் சகோதரனுக்காக தேர்தல் பிரச்சார மேடையில் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் முன்னாள் ஜாம்பவான் சனத் ஜெயசூரிய களத்தில் இறங்கியுள்ளார்.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் முத்தையா பிரபாகரன் தேர்தலில் போட்டியிடுகின்றார்.
இவருடைய தேர்தல் பிரச்சாரக்கூட்டம் நேற்று நுவரெலியாவில் நடைபெற்றது.
இதன்போது சனத் ஜெயசூரிய தனது ஆதரவை முத்தையா பிரபாகரனுக்கு வழங்கினார்.
இதில் தமிழில் உரையாற்றிய சனத் ஜெயசூரியா, முத்தையா பிரபாகரனுக்காக தங்கள் வாக்குச்சீட்டைப் போடுமாறு அழைப்பு விடுத்தார்.


















