கொரோனா வைரஸ் பரவம் அதிக ஆபத்து இருப்பதாக கருதும் 31 நாடுகளுடனான வணிக விமான பயணங்களை மறுஅறிவித்தல் வரை குவைத் தடை விதித்துள்ளது.
இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், எகிப்து, பிலிப்பைன்ஸ் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளும் இந்த பட்டியலில் உள்ளடங்குகின்றன. இந்த நாடுகளை சேர்ந்தவர்களே குவைத்தில் அதிகளவில் பணியாற்றுகிறார்கள்.
சீனா, ஈரான், பிரேசில், மெக்சிகோ, இத்தாலி மற்றும் ஈராக் ஆகிய நாடுகளுடனான விமான போக்குவரத்தும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
குவைத் சர்வதேச விமான நிலையம் சுமார் 30 சதவீதமான சர்வதேச விமான சேவையை மீண்டும் ஆரம்பித்துள்ளது. இது வரும் மாதங்களில் படிப்படியாக அதிகரிக்கும்.
குவைத்தில் கிட்டத்தட்ட 67,000 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 400 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா கட்டுப்பாடுகளை, ஜூன் மாத ஆரம்பத்திலிருந்து ஐந்து கட்டங்களாக மீள ஆரம்பித்து வருகிறது. அத்துடன், ஒரு பகுதியில் ஊரடங்கு உத்தரவு நீடிக்கிறது.