ஆயிரம் விளக்கு திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் மறைந்த பிறகு யார் அந்த பொறுப்பிற்கு தேர்வு செய்யப்படுவார் என ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
சென்னை மேற்கு மாவட்ட செயலாளருக்கான போட்டி பட்டியலில் கு.க.செல்வமும் இருந்தார். ஆனால், அப்பதவி நே.சிற்றரசுக்கு வழங்கப்பட்டது. இதனால் கு.க.செல்வம் அதிருப்தியடைந்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில் கு.க.செல்வம் டெல்லியில் இன்று மாலை பாஜக தலைவர் நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
திமுகவின் தலைமை நிலைய செயலாளராக இருக்கும் கு.க.செல்வம், 1997ல் அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்தார் என்பது நினைவுக்கூரத்தக்கது.



















