நாடாளுமன்றில் தமது கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை எதிர்பார்க்கவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை அமைக்கும் எனவும் ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நாடாளுமன்றில் தனது கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை எதிர்பார்க்கவில்லை” என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை ஏழு மணிக்கு ஆரம்பமாகி மாலை ஐந்து மணி வரையில் இடம்பெற்றிருந்தன.
நாடளாவிய ரீதியில் சுமார் 71 சதவீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.
இந்நிலையில், நாளை காலை 7 மணியளவில் வாக்குகள் எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, பகல் ஒரு மணி முதல் தேர்தல் முடிவுகள் அறிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



















