யாழில் சிங்களப் பேரினவாதக் கட்சி ஒன்றுக்கு பாராளுமன்ற ஆசனம் கிடைப்பது உறுதியாகியுள்ளது. எனினும் அங்கஜன் என்ற தனிநபரின் ஆதிக்கத்தாலேயே அந்த ஆசனம் கிடைக்கவுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும் ஏழை மக்களின் வாழ்வாதாரங்கள் என்பவற்றை வைத்து அங்கஜன் கட்சி மேற்கொண்ட பிரச்சாரங்களில் குறித்த வாக்குகள் அங்கஜனுக்கு கிடைத்திருக்கலாம் என கருதப்படுகின்றது.