கலகொட அத்தே ஞானசார தேரர், நாடாளுமன்றம் செல்வது உறுதியாகியுள்ளது.
எங்கள் மக்கள் சக்தி கட்சியின் சார்பில் அவர் நாடாளுமன்றம் செல்லவுள்ளார். தமது கட்சி சார்பில் ஞானசார தேரரை தேசியப்பட்டியலில் பெயரிட, அந்த கட்சி இன்று முடிவு செய்துள்ளது.
கட்சி உறுப்பினர்கள் ஒருமனதாக இந்த முடிவை எட்டியதாக கட்சியின் செய்தித் தொடர்பாளர் எரந்த நவரத்ன தெரிவித்தார்.
நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் எங்கள் மக்கள் சக்தி கட்சி ஒரு தேசியப்பட்டியல் ஆசனத்தை பெற்றது.
கட்சியின் தலைவர் சமன் பெரேரா இன்று தேசிய தேர்தல் ஆணைக்குழுவிடம் இந்த முடிவை தெரிவித்தார்.


















