கொழும்பு மேயர் ரோஸி சேனநாயக்கவின் கணவர் அத்துல சேனாநாயக்க திடீர் உடல்நலக்குறைவால் காலமானார்.
கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நேற்று உயிரிழந்தார்.
அவர் இறக்கும் போது அவருக்கு 64 வயதாகும்.
முன்னாள் பொலிஸ் மா அதிபரான ஸ்டன்லி சேனாநாயக்கவின் மகனான அத்துல சேனாநாயக்க, ஒரு தொழிலதிபராவார்.
நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் சமகி ஜன பலவேகயவிலிருந்து கொழும்பு மாவட்டத்திற்காக போட்டியிட்ட கனிஷ்க சேனநாயக்கவின் தந்தையும் ஆவார்