மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரேமலால் ஜயசேகர நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்பதில் சட்டச் சிக்கல் இல்லை என்று நாடாளுமன்ற செயலாளர் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்துள்ளார்.
கொலை குற்றம் தொடர்பாக நீதிமன்றம் அண்மையில் மரண தண்டனை விதித்த பிரேமலால் ஜயசேகர இம்முறை தேர்தலில் பொதுஜன பெரமுன சார்பில் இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.
இந்த நிலையில் அவர் பதவி ஏற்பதில் ஏதாவது சட்டச் சிக்கல் இருக்கிறதா என்பது தொடர்பில் விளக்கிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர்,
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்வதில் எந்த தடையும் இல்லை என நாடாளுமன்ற செயலாளர் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலில் பிரேமலால் திஸாநாயக்கவின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளதால், அவர் பதவிப் பிரமாணம் செய்வதில் சட்ட ரீதியான எந்த தடைகளும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.