கொட்டாஞ்சேனை-அளுத்மாவத்தை பிரதேசத்தில் நேற்றைய தினம் காருக்குள் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் சிறிது பதற்ற நிலை காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று பிற்பகல் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதோடு, இதுவொரு தற்கொலையாக இருக்கலாம் எனவும் அவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
உயிரிழந்த நபர் தொடர்பிலான நீதிமன்ற விசாரணைகளைத் தொடர்ந்து சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு உயிரிழந்த நபர் அதுருகிரிய பகுதியில் வசிக்கும் 42 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் உயிரிழந்த நபர் கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் தனியார் நிறுவனமொன்றில் திட்டமிடல் முகாமையாளராக கடமையாற்றியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.