இன்றைய தினம் புதிதாகப் பதவிப்பிரமாணம் செய்துள்ள புதிய அமைச்சரவையில் சிறுபான்மையின மற்றும் பெண் பிரதிநிதித்துவம் குறைவாகவே உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
அதன் பிரகாரம் அமைச்சரவை தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகள் ஒருவரும் இராஜாங்க அமைச்சரவையில் தமிழ் பேசும் பிரதிநிதிகள் இருவருமே உள்ளவாங்கப்பட்டுள்ளனர்.
மேலும் அமைச்சரவையில் ஒரு பெண் பிரதிநிதியும் இராஜாங்க அமைச்சரவையில் இரு பெண் பிரதிநிதிகளுமே உள்வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதிய அமைச்சரவையில் தமிழ் பேசும் அமைச்சர்கள் கடற்தொழில் நீரியல் வள அமைச்சராக டக்ளஸ் தேவானந்தாவும், நீதி அமைச்சராக முஸ்லிம் பிரதிநிதி அலி சப்ரியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதே போல் ஒரேயொரு பெண் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இராஜாங்க அமைச்சில் தமிழ் பேசுபவர்களின் பிரதிநிதியாக தபால் மற்றும் வெகுஜன ஊடகத்துறை இராஜங்க அமைச்சராக சதாசிம் வியாழேந்திரன் மற்றும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சராக ஜீவன் தொண்டமானும் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இராஜாங்க அமைச்சில் பெண் பிரதிநிதிதித்துத்தில், சிறைச்சாலைகள் மறுசீரமைச்சு மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சராக கலாநிதி சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே மற்றும் திறன் அபிவிருத்தி தொழில் கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சராக கலாநிதி சீதா அரம்பேபொலவும் உள்வாங்கப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது