விளையாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கும் நாமல் ராஜபக்சவிற்கு, முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ வாழ்த்து கூறியுள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தின் ஊடாக பதிவொன்றை இட்டுள்ள அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“அரசியலும் ஊழலும் அற்ற – சுதந்திரமான விளையாட்டுத்துறைக்கான சூழலை ஏற்படுத்துவதற்காக நாம் மேற்கொண்ட நடவடிக்கைகளைப் புதிய விளையாட்டுத்துறை அமைச்சர் தொடர்ந்தும் முன்னெடுத்துச்செல்வார் என்று நம்புகின்றோம்.
நாமல் ராஜபக்சவும் ஒரு விளையாட்டு வீரராக இருப்பதால் இவ்வமைச்சில் சிறப்பாக செயற்படுவார் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.
https://twitter.com/fernandoharin/status/1293433219287662592\
இதேவேளை, புதிதாகப் பதவியேற்றுக்கொண்டிருக்கும் அமைச்சரவைக்கு வாழ்த்துத் தெரிவிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இனிவரும் காலத்தில் ஏற்கனவே வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதுடன் ஜனநாயகத்தையும் பாதுகாக்க வேண்டிய பாரிய பொறுப்பு அரசாங்கத்திற்கு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்று கண்டி தலதா மாளிகையில் பதவி யேற்றுக்கொண்டது.
புதிதாக நியமனம் பெற்றிருக்கும் அமைச்சரவைக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துத் தெரிவித்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, மேலும் கூறியிருப்பதாவது,
நாமல் ராஜபக்ஷ, அஜித் நிவாட் கப்ரால் உள்ளடங்கலாக புதிதாகப் பதவியேற்றுக்கொண்டிருக்கும் அனைத்து அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கும் வாழ்த்துக்கள். எதிர்வரும் காலத்தில் நாம் பொறுப்பு வாய்ந்த ஒரு எதிர்க்கட்சியாக செயற்படுவோம்.
ஆனால் நாட்டுமக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டிய அதேவேளை, ஜனநாயகத்தையும் பாதுகாக்க வேண்டிய மிகப்பாரிய பொறுப்பு தற்போது அரசாங்கத்திற்கு இருக்கின்றது என்று அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
Congratulations to all #SriLanka cabinet n state ministers including @RajapaksaNamal n fellow global @EF_Fellows @an_cabraal. We will be a responsible opposition but t government has a huge responsibility now to deliver on t promises n maintain democracy. pic.twitter.com/4gzo6cQuwf
— Harsha de Silva (@HarshadeSilvaMP) August 12, 2020


















