முள்ளிவாய்க்கால் முற்றத்தில் அஞ்சலி செலுத்தி இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டு தன்னுடைய பாராளுமன்ற பயணத்தை இங்கிருந்து தொடங்குகிறேன் என பாராளுமன்றுக்கு தெரிவாகியுள்ள தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் முன்னாள் வடக்குமாகாண முதலமைச்சரும் முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆவணி மாதம் 5 ம் திகதி நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருக்கின்ற தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் முன்னாள் வடக்குமாகாண முதலமைச்சரும் முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசருமான க.வி.விக்னேஸ்வரன் பாராளுமன்றம் செல்வதற்கு முன்னதாக பல்லாயிரக்கணக்கான மக்கள் 2009 இல் உயிர் நீத்த இடமாகிய முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்டிருக்கின்றன நினைவு தூபியில் இன்று காலை 11 மணிக்கு அஞ்சலி நிகழ்வு ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருக்கின்ற தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் முன்னாள் வடக்குமாகாண முதலமைச்சரும் முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசருமான க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் தன்னுடைய கூட்டணியின் கட்சி தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் வருகைதந்து முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அகவணக்கம் செலுத்தி சுடரேற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
இந்நிகழ்வில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பங்காளி கட்சிகளின் தலைவர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், அனந்தி சசிதரன், எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் பின்னர் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் முன்னாள் வடக்குமாகாண முதலமைச்சரும் முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசருமான க.வி.விக்னேஸ்வரன் இவ்வாறு கருத்து தெரிவித்தார்-
2009 ஆம் ஆண்டு மே மாதம் உயிர்நீத்த எங்களுடைய உறவுகளின் கல்லறையில் நின்று பிரார்த்திக்கின்றேன். விடுதலைப் போராட்டத்தில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்ததும் இங்குதான். இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டு என்னுடைய பாராளுமன்ற பயணத்தை இங்கிருந்து தொடங்குகிறேன் என்றார்.


















