கொரோனாவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்ய அரசு தயாராக இருப்பதாக தமிழ அரசு அறிவித்துள்ளது.
பிரபல பின்னணி பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்று உறுதியானதால் கடந்த 5-ஆம் திகதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
ஆரம்பத்தில் அவரின் உடல்நிலை நல்ல நிலையில் இருப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து நேற்று திடீரென்று அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதனால் ஒட்டு மொத்த திரையுலகம் மற்றும் ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
https://twitter.com/charanproducer/status/1294302026554253320
இதற்கிடையில், அவரின் மகன் சரண் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், தந்தையின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அச்சப்படும் நிலை இல்லை என்றும் குறிபிட்டிருந்தார்.
இந்நிலையில், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு தேவையான மருத்துவ உதவி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டர் செய்தியில், எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்ய அரசு தயாராக உள்ளது.
Spoke to legend Singer #SPBalasubrahmanyam son SPB Charan & MD of MGM Hospital. Enquired about his health condition. Assured support from Govt. Wishing him a speedy recovery #GetwellSoonSPBSir
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) August 14, 2020
எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி சரண் மற்றும் சிகிச்சை பெற்று வரும் எம்.ஜி.எம் மருத்துவமனையின் எம்.டி.யிடம் விசாரித்தேன். அவர் விரைவாக குணமடைய வாழ்த்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.