அமெரிக்காவின் பிரபலமான கூடைப்பந்து வீரர் மைக்கேல் ஜோர்டனுடைய ஷூ சுமார் ரூ.4.6 கோடிக்கு ஏலம் சென்று பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
35 ஆண்டு பழமையான இந்த 1985 ஆம் ஆண்டில் நடைப்பெற்ற ஒரு விளையாட்டு போட்டியின் போது நைக் ஏர் 1”(Nike Air1) என்ற சிவப்பு மற்றும் வெள்ளை நிற ஷூவை அணிந்திருந்தார் என கூறப்படுகின்றது.
இந்த விலையுயர்ந்த ஷூவின் ஒரு ஷீவின் அளவு 13 இன்ச் என்பதும், மற்றொரு ஷீவின் அளவு 13.5 இன்ச் என்பது தான் இதன் சிறப்பம்சமாகும்.
ஷூவின் மீது மைக்கேல் ஜோர்டான் தனது கையெழுத்தும் ஒன்றையும் போட்டுள்ளார்.
மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மைக்கல் ஜோர்டனின் இன்னொரு ஷூ சுமார் 4.25 கோடி ரூபாய்க்கு ஏலம் கோரப்பட்டதாக சோதேபி (Sotheby’s) ஆன்லைன் வலைத்தளம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.