இலங்கையில் நேற்று 4 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
இவர்களில் ஒருவர் துருக்கியில் இருந்து நாடு திரும்பியவர். துருக்கிய விமான நிறுவனத்தில் அவர் பணியாற்றினார். நாடு திரும்பிய பின்னர் சீதுவையிலுள்ள ஒரு ஹொட்டலில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்.
மேலும், இருவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து நாடு திரும்பியவர்கள். ஒருவர் மாலைதீவைச் சேர்ந்தவர்.
மாலைதீவில் இருந்து திரும்பி வந்தவர் மவுண்ட் லவ்னியாவில் உள்ள ஒரு ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்.



















