யாழ்ப்பாணம் தொண்டைமானாறு 3ஆம் சந்தியில் நேற்று (18) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
அதேயிடத்தை சேர்ந்த உருத்திரன் திருவருட்செல்வன் (50) என்பவரே உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக வந்தவர், சந்தியில் மோதி தள்ளியுள்ளார். இதில் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளில் வந்தவர் காயமடைந்தார்.
வல்வெட்டித்துறை பொலிசார் விசாரணைகளை நடத்தி வருகிறார்கள்.


















