நாட்டை ஆட்சி செய்வது தற்பேதைய அரசாங்கத்தின் ஊடாக நாடாளுமன்றத்திற்கு வந்துள்ள பிரதிநிதிகள் அல்ல எனவும் சீனா, இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளே நாட்டை செய்கின்றன எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
புதிய நாடாளுமன்றத்தின் கூட்டத்தின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அரசாங்கம் பொய்யான தேசப்பற்றை காட்டி வருகிறது. சீனாவுக்கும் இந்தியாவுக்கு நாட்டை விற்ற எதனை பேர் இங்கு இருக்கின்றனர். இவர்கள் பொய்யான தேசப்பற்றை காட்டி வருகின்றனர்.
இராணுவ தலைமையகத்தை சீனாவுக்கு விற்பனை செய்தனர். துறைமுகத்தை இந்தியாவின் மோடியிடம் விற்பனை செய்ய போகின்றனர்.
அமெரிக்கா எம்.சீ.சீ. உடன்படிக்கை மூலம் 448 மில்லியன் டொலர்களை வழங்க உள்ளது. இந்த நாட்டை ஆட்சி செய்வது இவர்கள் அல்ல.
டெனால்ட் ட்ரம்ப், நரேந்திர மோடி, ஷிங் பிங் ஆகியோரே நாட்டை ஆட்சி செய்கின்றனர். இவர்கள் மூன்று பேரே அனுசரணையாளர்கள் எனவும் ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.


















