இந்தியாவில் கணவரை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை நாடகமாடிய மனைவியை பொலிசார் கைது செய்துள்ளனர்.
புதுடெல்லியை சேர்ந்தவர் கிருஷண் தியகி (50). இவர் மனைவி பிரியங்கா.
கிருஷனை கடந்த 18ஆம் திகதி பிரியங்கா மருத்துவமனைக்கு கொண்டு வந்தார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கிருஷன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
அங்கிருந்த உறவினர்களிடம் கிருஷணுக்கு புட் பாயிசன் ஆகி உயிர் பிரிந்ததாக பிரியங்கா கூறினார்.
ஆனால் மருத்துவர்களோ கிருஷன் கழுத்தில் காயம் இருப்பதாக கூறினர், இதையடுத்து கணவர் மன அழுத்தத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பிரியங்கா மாற்றி கூறினார்.
இதனால் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் சந்தேகமடைந்தனர்.
இது குறித்து பொலிசில் புகார் தரப்பட்ட நிலையில் பிரியங்காவை அவர்கள் கண்காணித்த போதிலும் இதை முதலில் தற்கொலை வழக்காகவே பதிவு செய்தனர்.
அப்போது இறுதிச்சடங்கு நடக்கும் இடத்தில் விதவையான பிரியங்கா அழாமல் இருந்ததோடு எந்த சலனமும் இல்லாமல் அங்குமிங்கும் திரிந்ததை பார்த்த பொலிசாருக்கு சந்தேகம் வலுத்தது.
இதையடுத்து அவரிடம் கிடுக்குபிடி விசாரணை செய்த போது இரண்டு ஆண் நண்பர்களுடன் சேர்ந்து கணவரை கொன்றதை பிரியங்கா ஒப்பு கொண்டார்.
அவர் அளித்த வாக்குமூலம் குறித்து பொலிசார் கூறுகையில், கிருஷன் தனது வயதுடையவர் என நினைத்து பிரியங்கா மணந்து கொண்டார்.
ஆனால் திருமணத்துக்கு பின்னரே தன்னை விட 20 வயது அவருக்கு அதிகம் என பிரியங்காவுக்கு தெரியவந்து அதிர்ச்சியடைந்தார்.
அந்த சமயத்தில் சகோதரியின் நண்பரான பர்மா என்பவருடன் பிரியங்காவுக்கு தொடர்பு ஏற்பட்டது.
பின்னர் பர்மாவின் சகோதரர் கரண் என்பவருடனும் பிரியங்காவுக்கு தொடர்பு ஏற்பட்டது, இதையடுத்து கரண் தனது உறவினர் என பொய்யாக கூறி தன் வீட்டிலேயே அவரை தங்கவைத்திருக்கிறார் பிரியங்கா.
இந்த சூழலில் தான் மூவரும் சேர்ந்து கிருஷனை கழுத்தை நெரித்து கொன்று தூக்கில் தொங்கவிட்டுள்ளனர் என கூறியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் பிரியங்கா மற்றும் பர்மாவை கைது செய்துள்ள பொலிசார் தலைமறைவாக உள்ள கரணை தேடி வருகின்றனர்.