புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புழுதிவாயல் பகுதியில் உள்ள வாய்க்காலில் இருந்து வயோதிபப் பெண் ஒருவரின் சடலம் ஒன்று நேற்று பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தளம் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற பொலிஸார் நீரில் மூழ்கிய நிலையில் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நீரில் மூழ்கி உயிரிழந்தவர் முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கணமூலை-குறிஞ்சாவெட்டை பகுதியைச் சேர்ந்த 71 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாய் என இனங்காணப்பட்டுள்ளதாகவும், இச்சம்பவம் தொடர்பில் புத்தளம் மற்றும் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.



















