ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்கும் திட்டம் அடுத்த செயற்குழு கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகள் குழு, அரசியல் செயல்முறைக்கு ரணில் விக்கிரமசிங்கவின் பங்களிப்பு மற்றும் அவர் நாட்டிற்கு ஆற்றிய சேவை ஆகியவை தேசிய மற்றும் சர்வதேச அளவில் கருதப்பட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளன.
அந்த உண்மையின் அடிப்படையில் தேசிய பட்டியல் ஊடாக ரணில் விக்கிரமசிங்கவை நாடாளுமன்றத்திற்கு அனுப்பும் திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாக கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கட்சி தலைமை தொடர்பான பிரச்சினைகள் இதுவரை தீர்க்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.