அனைத்து துறைகளிலுமான பணிகள் கீழ் மட்டத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ள காரணத்தினால் இப்போது தேவையாக இருப்பது மக்களின் எதிர்பார்ப்புக்களை உடனடியாக நிறைவேற்றவேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இராஜாங்க அமைச்சு செயலாளர்களிடம் தெரிவித்தார்.
மக்களின் முன்னேற்றத்திற்கும் நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கும் முக்கியத்துவம் வழங்கி இராஜாங்க அமைச்சுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இலக்குகளை அடைந்துகொள்வதில் செயலாளர்களுக்கு முக்கிய பொறுப்பும் பணிகளும் வழங்கப்பட்டுள்ளன.
மக்கள் மத்தியில் சென்று பிரச்சினைகளை தீர்த்து சவால்களை வெற்றிகொள்வதற்காக செயற்படுங்கள் என்று ஜனாதிபதி புதிய இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு பணிப்புரை விடுத்தார்.
நேற்று முற்பகல் ஐனாதிபதி அலுவலகத்தில் இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வின் போதே ஜனாதிபதி கோட்டாபய இவ்வாறு தெரிவித்துள்ளார்.


















