இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இச் சந்திப்பு இன்று வியாழக்கிழமை பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம்பெற்றுள்ளது.
இதன் போது, இந்தியத் தூதுவர், சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசாநாயக்க உள்ளிட்டோரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இது குறித்து இந்திய தூதரகம் தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

குறித்த பதிவில்.. இச் சந்திப்பின் போது, இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே பொதுத் தேர்தல்களை பாதுகாப்பாகவும் வெற்றிகரமாகவும் நடத்தியதற்கு வாழ்த்து தெரிவித்ததுடன் நல்லுறவு கலந்துரையாடல்களில், நாடாளுமன்ற பரிமாற்றங்கள், இரு நாடுகளினதும் மக்களுக்கிடையேயான உறவுகள் உட்பட இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முக மற்றும் பழமையான நாகரிக உறவுகளை வலுப்படுத்த இந்தியா உயர் முன்னுரிமையை வழங்குவதாகவும் உயர் ஸ்தானிகர் வலியுறுத்தினார். என தெரிவிக்கப்பட்டுள்ளது.


















