இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடல் வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள தனியார் விடுதியில் காலை 10.30 மணிக்கு ஆரம்பமானது.
கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், கட்சியின் பொதுச் செயலாளர் துரைராசசிங்கம், எம். ஏ.சுமந்திரன், சிறீதரன் உட்பட தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும்; மத்திய செயற்குழுவின் அங்கத்தவர்கள் என பலரும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.
இக்கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு மற்றும் எதிர்காலத்தில் கட்சியை வளர்ச்சிப் பாதையில் முன்னோக்கிச் செல்வதற்கான வழிவகைகளை ஆராய்தல், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஆராய்தல் போன்றன கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.