திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைரோடு பள்ளப்பட்டி பகுதியை சார்ந்தவர் பசுபதி ராஜா (வயது 24). இவர் விவசாயியாக இருந்து வரும் நிலையில், திருமணம் முடிந்து 2 குழந்தைகள் இருக்கின்றனர்.
இவருக்கு அப்பகுதியை சார்ந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில், சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி வலுக்கட்டாயமாக தாலிகட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி, பெற்றோரிடம் கண்ணீர் மல்க நடந்ததை விவரித்துள்ளார்.
இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், அங்குள்ள அம்மைநாயக்கனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து பசுபதியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.



















