ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 31 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3,049ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளாகிய 169 பேர் மருத்துவமனையில் தற்போது சிகிச்சைப் பெற்று வருவதோடு, தொற்றிலிருந்து இதுவரை 2,868 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.
இறுதியாக அடையாளம் 31 தொற்றாளர்களும் கட்டாரில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



















