கல்முனை – பெரியநீலாவணை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்றையதினம் (31) இரவு வீசிய அதிவேக காற்று காரணமாக வீதியோரம் இருந்த மின்சார கம்பம் ஒன்று வீதியில் பயணித்த சிறிய ரக கெப் வாகனத்தின் மீது திடீரென விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கெப் வண்டி மீது பயணித்த நபர்கள் பலத்த காயங்களுக்கு மத்தியில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





















