யாழ்ப்பாணம் நகர் பகுதியில் 248 கிராம் கஞ்சாவுடன் 46 வயதுடைய குருநகரை சேர்ந்த நபர் யாழ் மதுவரி திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுவரி திணைக்கள அதிகாரிகளிற்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து குறித்த நபர் யாழ் நகரப் பகுதியில் விற்பனைக்கு தயாராக தனது மோட்டார் சைக்கிளில் கஞ்சாவினை மறைத்து வைத்திருந்த வேளையில் மதுவரித் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மதுவரி உதவி ஆணையாளர் வடமாகாணம் பிரபாத் ஜெயவிக்கிரவின் வழிநடத்தலின் கீழ் யாழ்ப்பாண மதுவரித் திணைக்கள பொறுப்பதிகாரி ரகுநாதன் தலைமையிலான அணியினரால் குறித்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.