பங்களாதேஷின் கன்ஜ் பிரதேசத்தில் உள்ள இஸ்லாமிய பள்ளிவாசல் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவேளை இச்சம்பவத்தில் மேலும் 33 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பள்ளிவாசலில் இருந்த குளிரூட்டி ஒன்று வெடித்ததன் காரணமாகவே இந்த விபத்து நேர்ந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்தாலும்,
எரிவாயு கசிவு காரணமாகவே இந்த பாரிய வெடிப்பு ஏற்பட்டதாக தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



















