ஏற்றிவிட்டவர்களை உதைந்து தள்ளுவதே அகில இலங்கை தமிழ் காங்கிரசின் வழக்கம் என வேதனை தெரிவித்துள்ளார் சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம்.
நேற்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்டவாளர் அணி உருவாக்கும் நிகழ்வில் உரையாற்றிய போது இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியென்ற பெயரில் தமிழ் காங்கிரஸ் செயற்பட தொடங்கிய பின்னர், தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கான கட்டமைப்பை உருவாக்க நானும் பல முயற்சிகள் மேற்கொண்டேன். எனினும், கட்சி தலைமை அதை விரும்பவில்லை. அதனால் நான் ஒதுங்கி விட்டேன்.
இப்பொழுது மணிவண்ணனிற்கு நிகழ்ந்துள்ளதும் அதுதான். மணிவண்ணனிற்கு இழைக்கப்பட்டது மிகப்பெரிய அநீதியென தெரிவித்தார்.


















