தற்போது வர்த்தமானி செய்யப்பட்டுள்ள அரசியலமைப்பின் 20வது திருத்தத்தில் மாற்றங்களைச் செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசாங்கத்தின் சிரேஸ்ட அமைச்சர் விமல் வீரவன்ச இன்று இதனை உறுதிப்படுத்தினார். நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் பேசிய அவர்,
“தற்போது வர்த்தமானி அறிவிப்பு செய்யப்பட்டுள்ள 20வது திருத்தத்தில் சில சிக்கலான பகுதிகள் உள்ளன என்பதை நாங்கள் சுட்டிக்காட்டியிருந்தோம்.
இதனையடுத்து, பிரதமர் ஒரு குழுவை நியமித்துள்ளார். அந்த குழு ஆய்வு செய்து ஒரு அறிக்கை சமர்பிக்கும். இதன் பின்னர் ஒரு புதிய 20வது திருத்தம் வர்த்தமானி செய்யப்படலாம்” என அவர் மேலும் கூறியுள்ளார்.


















