நீட் தேர்வு தொடர்பாக நடிகர் சூர்யா தெரிவித்த கருத்தில் உள்நோக்கம் இல்லை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் அண்ணாவின் 112-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில், அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து வைகோ மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வு பயத்தால் மாணவர்கள் தற்கொலை செய்த அதிர்ச்சியில் நடிகர் சூர்யா கருத்து தெரிவித்துள்ளதாகவும், அவரது கருத்தில் உள்நோக்கம் இல்லை என்றும் கூறினார்.
சூர்யா ஏராளமான மாணவர்களை எந்தவிதமான விளம்பரங்களும் இன்றி படிக்க வைத்து வருகிறார் என்றும் அவர் ஒரு அறச்சிந்தனையாளர் என்றும் வைகோ தெரிவித்தார்.




















