தியாகி திலீபனின் நினைவேந்தலை தடுக்க யாழில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், திலீபனின் நினைவேந்தல் தொடக்க நாளில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார் எம்.கே.சிவாஜிலிங்கம்.
இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். உரும்பியராயிலுள்ள பொன்.சிவகுமாரனின் நினைவிடத்தில், தியாகி திலீபனின் நினைவஞ்சலியை மேற்கொண்டபின்னர், கோண்டாவிலிலுள்ள சிறிசபாரத்தினத்தின் நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்வை மேற்கொண்டார்.
அங்கு சென்ற கோப்பாய் பொலிசார் சிவாஜிலிங்கத்தை கைது செய்தனர்.