இலங்கையின் மூத்த பிரஜைகள் முடியுமானளவு வீடுகளிலேயே தங்கியிருப்பது சிறந்தது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
தொற்றுநோய் பிரிவின் சிரேஸ்ட நிபுணர் வைத்திய கலாநிதி சுத்த சமரவீர இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.
கொரோனா தாக்கத்தில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் இந்த செயற்பாடு அவசியம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் கொரோனா சமூக மட்டத்தில் பரவவில்லை. எனினும் அதற்கான ஆபத்து இன்னும் அகலவில்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உடலில் பல்வேறு நோய்களை கொண்டிருப்பவர்களுக்கு கொரோனா தொற்று விரைவில் ஏற்படக்கூடும் ஆபத்து உள்ளது.
எனவே தேவையேற்படின் மாத்திரம் இலங்கையின் மூத்த பிரஜைகள் வெளியில் செல்லவேண்டும் என்றும் சுதத் சமரவீர கோரியுள்ளார்
இதேவேளை பொது போக்குவரத்துக்களில் தற்போது சுகாதார முறைப்படி சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுவதில்லை. இது கவனிக்கப்படவேண்டிய விடயமாக கருதப்படுகிறது.
அதேநேரம் பொதுமக்கள் தொடர்ந்தும் முகக்கவசங்களை அணிதல், கைககளை கழுவுதல், சமூக இடைவெளி உட்பட்ட பழக்கங்களை கைக்கொள்ளுதல் அவசியம் என்றும் தொற்றுநோய் பிரிவின் சிரேஸ்ட நிபுணர் வைத்திய கலாநிதி சுத்த சமரவீர கோரியுள்ளார்.