இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் சமூக வலைதளம் மூலம் பழகி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை பொலிசார் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் 18 வயது இளைஞருக்கும் 16 வயது சிறுமிக்கும் 2 வருடங்களுக்கு முன்பு சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
நாளடைவில் இருவரும் அடிக்கடி நேரில் சந்தித்து பழகி வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் அந்த இளைஞன் வீட்டில் யாரும் இல்லாதபோது சிறுமியை வரவழைத்துள்ளார்.
அப்போது அவரை பாலியல் வன்கொடுமையின் செய்துள்ளார். இதை தொடர்ந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு சிறுமி தான் கர்ப்பமானதை உணர்ந்துள்ளார்.
இதனையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் பிரசவத்திற்கு முந்தைய பரிசோதனைக்காக சுகாதார மையம் ஒன்றிற்கு சிறுமி சென்றுள்ளார்.
தொடர்ந்து ஒரு ஆண் குழந்தையையும் வீட்டிலேயே அந்த சிறுமி பெற்றெடுத்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக சுகாதார மையம் அளித்த தகவலின் அடிப்படையில் அந்த இளைஞரை பொலிசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
இதேபோல் உத்திரபிரதேசத்தில் மார்க்கெட்டிற்கு சென்று வந்த சிறுமியை 5 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
மட்டுமின்றி, குறித்த சம்பவத்தை காணொளியாக பதிவு செய்து, அதை சமூக ஊடகத்திலும் பதிவேற்றியுள்ளனர்.
இச்சம்பவம் கடந்த 7 ஆம் திகதி நடைபெற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது.




















