தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆர்யா. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார்.
நீண்ட காலம் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்த ஆர்யா கடந்த ஆண்டு நடிகை சாயிஷாவை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான எங்க வீட்டு மாப்பிள்ளை பெண் தேடும் நிகழ்ச்சியில் ஆர்யா பங்கேற்று பின் கைவிட்டது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.
அதில் பங்கேற்ற அபர்ணதி என்ற பெண் ஆர்யாவிடம் ரொம்ப நெருங்கியே பழகி வந்தார். ஆனாலும் ஆர்யா மனம் மாறி யாரையும் திருமணம் செய்ய சம்மதமில்லை என மறுத்து வெளியேறினார்.
இதையடுத்து, நிகழ்ச்சி நிறைவடைந்த பிறகு அபர்ணதி ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக ஜெயில் படத்தில் நடித்துள்ளார். படத்தில் நடிக்க தொடங்கியிருப்பதால் கவர்ச்சி உடையில் கலக்கல் போட்டோ ஷுட்டுக்களை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், தற்போது டிவிட்டர் கணக்கில் தனது பெயருக்கு பின்னால் ’6ya’ என நடிகர் ஆர்யாவின் பெயரை சேர்த்துள்ளார்.
இதேபோல் தனது புரஃபைல் போட்டோவில் ஆர்யாவுடன் சேர்ந்திருக்கும் போட்டோவை வைத்துள்ளார் அபர்ணதி.
மேலும், பேக் கிரவுண்ட் இமேஜில் தன்னுடைய போட்டோவை வைத்துள்ள அபர்ணதி, தன் பெயரில் உள்ள பர் என்பதையும் ஆர்யா பெயரில் உள்ள யாவையும் சேர்த்து பர்யா என்றும் வைத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி போயுள்ளனர்.
அவருக்கு திருமணம் முடிந்து குழந்தையை பிறந்துவிடும் போல் இருக்கிறது, இன்னும் அவரையே கணவராக நினைத்து கொண்டிருக்கிறீர்களா? என கேட்டுள்ளனர்.