கம்பஹாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான பெண் தொடர்பான பல தகவல்கள் வெளியாகி உள்ளன.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதாக இன்று காலை உறுதி செய்யப்பட்ட பெண் தொடர்பான மேலதிக தகவல்களை சுகாதார பிரிவு வெளியிட்டுள்ளது.
திலுவலப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த இந்த பெண் மினுவங்கொட பிரதேசத்தில் உள்ள பிரபல ஆடை தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றியவர் என தெரியவந்துள்ளது.
அவர் பணியாற்றிய குளிரூட்டப்பட்ட கட்டடத்தில் 400 ஊழியர்கள் வேலை செய்துள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய 400 பேரையும் அடையாளம் கண்டு அவர்களின் வீடுகளுக்கு சென்று தெளிவுப்படுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அவருடன் பேருந்தில் பயணித்த 40 ஊழியர்கள் தற்போது சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் இந்த பெண்ணின் கணவர், பிள்ளைகள் இருவரும் மற்றும் அவரது தந்தையும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்றுக்குள்ளான பெண் பணியாற்றிய கட்டடம் தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கையில் மூன்று மாதங்களின் பின்னர் சமூக மட்டத்தில் கொரோனா நோயாளி இன்று காலை அடையாளம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.