இந்தியாவில் கொரோனா பாதிப்பு 65 லட்சத்தை கடந்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று ஒரே நாளில் 75 ஆயிரத்து 829 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 65 லட்சத்து 49 ஆயிரத்து 373 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 940 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 1 லட்சத்து, ஆயிரத்து 782 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 55 லட்சத்து 9 ஆயிரத்து 966 பேர் குணமடைந்துள்ள நிலையில், 9 லட்சத்து 37 ஆயிரத்து 625 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் கொரோனா பலி விகிதம் 1.56 சதவீதமாகவும், குணமடைந்தவர்கள் விகிதம் 83.84 சதவீதமாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.