பிரிட்டன் தலைநகரிலுள்ள ஒரு உயிரியல் பூங்காவில் இருந்த ஆப்ரிக்க சாம்பல் நிற கிளிகள், பார்வையாளர்களை மரியாதை குறைவாகவும், மனம் புண்படும்படியாகவும் பேசியதால், அவை தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த சுவாரஸ்ய சம்பவம் குறித்து கூறப்படுவதாவது; லண்டனிலுள்ள லின்கோல்ன்ஷைர் உயரியல் பூங்காவில் உள்ள கிளிகள் இருப்பிடத்திற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் பில்லி, எரிக், டைசன், ஜேடே மற்றும் எலிசி என்ற பெயர்கள் கொண்ட 5 ஆப்பிரிக்க கிளிகள் புதிய வரவாக வந்து சேர்ந்தன.
இவை வந்த சில நாட்களிலேயே பார்வையாளர்களிடம் கிண்டலாகவும் மரியாதைக் குறைவாகவும் நடந்து கொள்வதாக நிர்வாகத்தினருக்கு தெரியவந்துள்ளது. ஒரு கிளி அடிக்கடி what the Fu***K என்ற வார்த்தையை அடிக்கடி பாவிக்கிறது. மற்றைய கிளி குண்டான நபர்களை பார்த்து Fatty Bit**h (மிகவும் தரக் குறைவான வார்த்தையை) பாவித்து திட்டுகிறது.
மேலும் சொல்லப் போனால் ஏனைய 2 கிளிகளும் ஒரு நக்கல் சிரிப்பு கூட சிரித்து காட்டுகிறது. இதனால் தான் நிர்வாகம் இந்த 5 கிளிகளையும் தனிமைப்படுத்தி உள்ளார்கள்.