கம்பஹா – மினுவாங்கொடை காவல்துறை பிரிவில், காவல்துறை ஊரடங்கு சட்டத்தை மீறிய 10 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதேவேளை, திவுலப்பிட்டியில் கொவிட்-19 தொற்றுறுதியான, ஆடைத் தொழிற்சாலை ஊழியரான பெண்ணுடன் தொடர்புடைய 780 பேர் வரையில், தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் நேற்றைய தினம் ஆயிரத்து 400 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக கொவிட்-19 கட்டுப்பாட்டு மையத்தின் தலைவரான இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அந்த பரிசோதனை முடிவுகள் இன்று கிடைக்கப்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.