வேறு ஒருவரை முதலமைச்சராக அறிவிப்பேன் என அறிவித்ததில் இருந்து ரஜினியுடனான முரண்பாடு நீங்கி விட்டதாக நாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னை, அம்பத்துரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டாம் என கேட்டு கொண்டார். புகழ்ச்சியை மட்டுமே பார்த்த ரஜினிகாந்தால் தாங்கள் சந்திப்பது போன்ற அவச்சொற்களை தாங்க முடியாது என்றும் சீமான் குறிப்பிட்டார்.
நன்றாக புத்தகம் படியுங்கள், இமயமலை செல்லுங்கள், பேரன் பேத்தியுடன் விளையாடுங்கள்., அரசியலுக்கு வந்தால் களத்தில் இறக்கி விட்டவர்களே வசைபாடுவார்கள் என ரஜினி காந்திற்கு சீமான் அறிவுரை வழங்கினார்.