ஐம்பது கடற்படையினர் யாழ்ப்பாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
மினுவாங்கொடையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு சிகிச்சையளித்த மருத்துவ தாதிபயணித்த புகையிரதத்தில் பயணம் செய்த கடற்படையினரே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
குறிப்பிட்ட தாதி புகையிரதத்தில் யாழ்ப்பாணம் சென்றார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவர் புகையிரதத்தில் பயணம் செய்த அதேபகுதியில் பயணித்த கடற்படையினரே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களுடன் பயணம் செய்த ஏனைய பயணிகளை அடையாளம் காணும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.