தமிழகத்தில் 2021-ல் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-வின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.
கடந்த 10 நாட்களாக அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி நிலவி வந்தது தற்போது அதற்கு பதில் கிடைத்துள்ளது.
அதிமுக முதல்வர் வேட்பாளர், வழிகாட்டுதல் குழு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருதரப்பிலும் நேற்று இரவு வரைதீவிர ஆலோசனை நடத்தப்பட்டது.
அதிகாலை வரை நீடித்த ஆலோசனையில் இரு தரப்பு நிபந்தனைகள், கோரிக்கைகளும் ஏற்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று காலை சென்னையில் உள்ள அதிமுக தலைமையகத்திற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உட்பட அதிமுக அமைச்சர்கள், கட்சியினர் வருகை தந்தனர்.
அதிமுக வழிகாட்டுதல் குழுவை இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், காமராஜ், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன், பா.மோகன், கோபாலகிருஷ்ணன், மாணிக்கம் ஆகிய 11 பேர் அதிமுக-வின் வழிகாட்டுதல் குழு உறுப்பினர்களாக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இக்கூடத்தில் பேசிய கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அதிமுக-வின் முதல்வர் வேட்பாளராக கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமியை அறிவித்தார்.



















