யாழ்.வடமராட்சி கரணவாய், மற்றும் வதிரி பகுதிகளில் அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களை மீறி இயங்கிவந்த தனியார் கல்வி நிலையங்கள் இரண்டு இன்று சீல் வைக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்ததையடுத்து தனியார் கல்வி நிலையங்களை மூட அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அரசாங்கத்தின் அறிவித்தலைக் கருத்தில் கொள்ளாது தொடர்ந்தும் தமது கல்விச் செயற்பாடுகளை முன்னெடுத்தமை தொடர்பிலேயே இந்த கல்வி நிலையங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
கரவெட்டி பிரதேச வைத்தியரின் அறிவுறுத்தலுக்கு அமைய நெல்லியடி சுகாதார பரிசோதகரால் குறித்த கல்வி நிறுவனங்கள் இரண்டும் சீல் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது