தமிழர்களின் சமையலறையில் பொதுவாக காணப்படும் ஓர் பொருள் தான் எள்ளு. இந்த எள்ளுவில் இரண்டு வகைகள் உள்ளன.
இரண்டுமே மருத்துவ குணங்கள் நிறைந்த விதைகள் தான். எள்ளு விதைகள் உணவை சமைக்கும் போது நல்ல ப்ளேவருக்காக பயன்படுத்தப்படுகிறது.
அதோடு இந்த சிறிய விதைகளில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளன. இந்த விதைகளை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ஒட்டுமொத்த உடலினுள்ளும் மாயங்கள் நிகழ்வதைக் காணலாம்.
இப்படிப்பட்ட எள்ளு விதைகளில் கருப்பு எள்ளு விதைகளை அன்றாடம் சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் என்னவென்பதை காண்போம் வாருங்கள்.
- இந்த சிறிய எள்ளு விதைகளில் மக்னீசியம் உள்ளது. இது உயர் இரத்த அழுத்தத்தை தடுக்கக்கூடியது.
- அதோடு இந்த விதைகளில் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் மற்றும் சீசமின் போன்றவை அதிகம் உள்ளது. இது இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.
- எள்ளு விதைகள் செரிமான பிரச்சனைகளான மலச்சிக்கலை சரிசெய்யக்கூடியது.
- இவற்றில் நார்ச்சத்து மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் உள்ளன. மேலும் இந்த விதைகள் குடலியக்கத்தை மேம்படுத்தும் மற்றும் செரிமான செயல்பாட்டை மென்மையாக நடைபெறச் செய்யும்.
- இந்த சிறிய விதைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பைட்டோகெமிக்கல்கள் உள்ளன. இது புற்றுநோயை உண்டாக்கும் செல்களை எதிர்த்துப் போராடி உடலுக்கு பாதுகாப்பை அளிக்கும்.
- எள்ளு விதைகளில் உள்ள சீசமைன் ப்ரீ-ராடிக்கல்களால் உடலுக்கு ஏற்படும் சேதத்தைத் தடுக்கிறது.
- எள்ளு விதைகளில் கால்சியம் மற்றும் ஜிங்க் அதிகம் உள்ளது. இது எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, எலும்புகளை வலிமையாகவும் வைத்துக் கொள்ளும்.